உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மண் புழு உரம் வீட்டிலேயே தயாரிக்கலாம்

மண் புழு உரம் வீட்டிலேயே தயாரிக்கலாம்

தொண்டாமுத்துார்: மண் வளத்தை காக்க, வீட்டிலேயே மண் புழு உரம் தயாரித்தால், மண் வளம் மற்றும் விளைச்சல் பெருகுவதோடு மட்டுமின்றி, செலவுகளும் வெகுவாக குறையும் என்கிறார் செம்மேட்டை சேர்ந்த செல்வராஜ்,63. நான், கடந்த, 40 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறேன். விவசாயத்தில், குறுகிய கால பயிர்கள், நீண்ட கால பயிர்கள் என, மாறி மாறி சாகுபடி செய்தேன். விளைச்சல் பெருக, ரசாயன மருந்துகளை பயன்படுத்தினேன். இதன் விளைவாய், மண்ணின் வளம் குறைந்து, விளைச்சலும் குறைந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தபோது, வேளாண் பல்கலை பேராசிரியர் ஒருவர், எனக்கு மண் புழு உரம் தயாரித்தல் குறித்த வழிமுறைகளை எடுத்துரைத்தார். அவரின் வழிகாட்டுதலில், வீட்டிலேயே, சிறியதாக மண் புழு உரம் தயாரிக்க துவங்கினேன். அப்போது, முழு நிலத்திலும், பாக்கு மரங்களை நடவு செய்தேன். இந்த இயற்கை முறையிலான மண்புழு உரத்தை, நல்ல வளர்ச்சியடைந்த மண் புழுவுடன், பாக்கு மரங்களுக்கு வைத்தேன். மரமும் நல்ல வளர்ச்சி பெற்றது. இதனையடுத்து, ஒரு சென்ட் இடத்தில், அரசு மானியத்தில், 20 அடி நீளம், 3 அடி உயரம், 2 அடி அகலம் கொண்ட, 2 தொட்டிகள் அமைத்தேன். அதில், மாட்டுச்சாணம், காய்ந்த இலைகளை, 1:3 என்ற விகிதத்தில் கலந்து, வேளாண் பல்கலை.,யில் இருந்து வாங்கி வந்த மண்புழுக்களையிட்டேன். அதன்மேல், வைக்கோல் நிரப்பி, சிறிது தண்ணீர் ஊற்றினேன். முதல் நாள் தவிர்த்து, தொடர்ந்து, 60 நாட்களும், தினமும், 10 நிமிடங்கள் மட்டும், உரத்தில் தண்ணீர் தெளிக்க செலவிட்டேன். 60 நாட்கள் முடிவில், நல்ல முதிர்ந்த மண்புழுவுடன், சத்தான மண்புழு உரம் கிடைத்தது. பாக்கு மரத்திற்கு, சாணம் உரம் கட்டாயம் வைக்க வேண்டும். தற்போது, 1 லோடு எரு சாணம், 12 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், எந்த செலவுமின்றி, மண் புழு உரம் தயாரித்து கொள்வதால், செலவும் வெகுவாக குறைகிறது,என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை