மேலும் செய்திகள்
இன்றைய மின் தடை
24-Apr-2025
கோவை; தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் குனியமுத்துார், கோவைபுதுார் பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட, குளத்துப்பாளையம், மலைநகர் பகிர்மான பகுதிகளில், தவிர்க்க இயலாத நிர்வாக காரணங்களால், மே மாதத்துக்கான மின் கணக்கீடு மேற்கொள்ளவில்லை.குளத்துப்பாளையம் பகிர்மானத்துக்கு உட்பட்ட ஊர்கவுண்டர் வீதி, அம்மாசை கவுண்டர் வீதி, மகாலட்சுமி நகர், தொட்டராயன் கோவில் வீதி, கோகுலம் காலனி அனைத்து வீதிகள்; மலைநகர் பகிர்மானத்துக்கு உட்பட்ட அண்ணா நகர், எம்.ஜி.ஆர்., நகர் மற்றும் திரு.வி.க., நகரை சேர்ந்த மின் நுகர்வோர், மார்ச் மாத மின் கட்டணத்தையே மே மாதத்துக்கும் செலுத்தலாம், என, குனியமுத்துார் செயற்பொறியாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
24-Apr-2025