உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சரக்கு ஆட்டோ மோதி இளைஞர் பலி

சரக்கு ஆட்டோ மோதி இளைஞர் பலி

சொக்கம்பாளையத்தைச் சேர்ந்த கந்தசாமி மகன் தியாகராஜ், 26. இவரது நண்பர்கள் பூபதி, 26. தமிழ்செல்வன், 27. ஆகியோர் மோட்டார் பைக்கில், 31ம் தேதி இரவு அன்னூர்--அவிநாசி சாலையில், சோமனூர் பிரிவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென வேகமாக வந்த சரக்கு ஆட்டோ, பைக் மீது மோதியது. இதில் மூவரும் காயமடைந்தனர். பைக் ஓட்டி வந்த தியாகராஜ், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். மற்ற இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து அன்னூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ