பைக் விபத்தில் வாலிபர் பலி
அன்னுார்; சின்னவேடம்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி மகன் சிவப்பிரகாஷ், 25. தனியார் நிறுவன ஊழியர். இவரது நண்பர் ஹரி பிரகாஷ், 26.இருவரும் மோட்டார் பைக்கில் நேற்று முன்தினம் இரவு , சத்திய மங்கலம் சென்று கொண்டிருந்தனர். செல்லப்பம்பாளையம் அருகே செல்லும்போது சாலையை கடக்க முயன்ற வெங்கடேஸ்வரி, 40, என்ற பெண் மீது பைக் மோதியது. இதில் படுகாயம் அடைந்த சிவப்பிரகாஷ் இறந்தார். ஹரி பிரகாஷ் மற்றும் வெங்கடேஸ்வரி படுகாயம் அடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.