மேலும் செய்திகள்
மனநலம் பாதிக்கப்பட்டவர் மாயம்
11-Sep-2025
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, மூதாட்டியை கொலை செய்த நபரை பிடித்து தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர். பொள்ளாச்சி அருகே, கோபாலபுரத்தில் மூதாட்டி ஒருவர் இறந்து கிடப்பதாக தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்துக்கு சென்று, மூதாட்டியின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். போலீசார் கூறியதாவது: கேரளா மாநிலம், மூங்கில்மடையை சேர்ந்தவர் கோவிந்தராஜ்,40. இவர், பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளார். இவரது பெற்றோர் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் வயது மூப்பு காரணமாக இறந்தனர். இவர், ரோட்டில் சுற்றித்திரிவதும், கிடைக்கும் உணவை உட்கொண்டும் வருகிறார். இந்நிலையில், கோபாலபுரம் நெடும்பாறையை சேர்ந்த பட்டீஸ்வரி,80, கோபாலபுரத்தில் உள்ள குப்பை மேட்டில் குப்பை சேகரிக்க சென்றதாக தெரிகிறது. அப்போது, அங்கு இருந்த கோவிந்தராஜ்க்கும், பட்டீஸ்வரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. கோபமடைந்த கோவிந்தராஜ், மூதாட்டியை கல்லால் அடித்து கொலை செய்துள்ளார். கோவிந்தராஜ் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிகிறது. எனினும், மனநலம் பாதிக்கப்பட்டவரா என டாக்டர் பரிசோதனை மேற்கொண்டு உறுதி செய்யப்படும். தற்போது, அவரை பிடித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு, கூறினர்.
11-Sep-2025