உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இளைஞர் உயிரிழப்பு கொலை வழக்காக மாற்றம்

இளைஞர் உயிரிழப்பு கொலை வழக்காக மாற்றம்

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் முகமது ஆசிப், 28. இவரது நண்பர் முகமது யாசின் பாபு, 27. இவர்களை முன் விரோதம் காரணமாக மேட்டுப்பாளையம் ஸ்ரீரங்கராயன் ஓடை பகுதியை சேர்ந்த கருப்பசாமி, 22, எம்.எஸ்.ஆர்.புரத்தை சேர்ந்த கர்ணன், 19, ஆகியோர் தாக்கினர். இதில் முகமது யாசின் பாபுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. முகமது ஆசிப்பிற்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கருப்பசாமி, கர்ணன் இருவரையும் கைது செய்தனர். இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெறு வந்த முகமது யாசின் பாபு நேற்று முன் தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை