உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கல்லுாரி மாணவிக்கு தொல்லை; ஆய்வக உதவியாளர் கைது

கல்லுாரி மாணவிக்கு தொல்லை; ஆய்வக உதவியாளர் கைது

சிதம்பரம் ;: சிதம்பரம் அரசு கல்லுாரியில், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆய்வக உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.சிதம்பரம் சி.முட்லுார் அரசு கல்லூரி மாணவி ஒருவருக்கு அதே கல்லூரியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றிவரும் நபர் பாலியல் தொல்லை கொடுத்ததாக, நேற்று முன் தினம் இரவு இந்திய மாணவர் சங்கத்தினர், சிதம்பரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். நேற்று சம்மத்தப்பட்ட கல்லுாரி மாணவியிடம், போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து மாணவி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து, கல்லுாரி வேதியியல் துறை ஆய்வக உதவியாளர் சி. முட்லுார் மண்டபம் பகுதியை சேர்ந்த பிச்சைக்காரன் மகன் சிதம்பரநாதனை, 34; பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !