உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வாடகை செலுத்தாததால் 2 கடைகளுக்கு சீல்

வாடகை செலுத்தாததால் 2 கடைகளுக்கு சீல்

கடலுார்: கடலுார் பஸ் நிலையத்தில் மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாத இரண்டு கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.கடலுார் திருப்பாதிரிபுலியூர் பஸ் நிலையத்தில் 65க்கும் மேற்பட்ட மாநகராட்சி கடைகள் உள்ளது. இதில், 30க்கும் மேற்பட்ட கடைகாரர்கள் மாநகராட்சிக்கு வாடகை தராமல் ரூ. 3 கோடி பாக்கி வைத்துள்ளனர். பல முறை அறிவுறுத்தியும் வாடகை செலுத்தாததால், கடைகளை பூட்டி சீல் வைக்க கமிஷனர் அனு உத்தரவிட்டார்.அதன்பேரில், மாநக ராட்சி வருவாய் அலுவலர் ரம்யா தலைமையில் ஊழியர்கள் பஸ் நிலையத்தில் வரி வசூலில் ஈடுபட்டனர். நீண்ட காலமாக வாடகை செலுத்தாத இரு கடைகளை பூட்டி 'சீல்' வைத்தனர். இதனால் பஸ் நிலைய கடைக்காரர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. வாடகை செலுத்தாத மற்ற கடைக்காரர்கள் இரு நாட்கள் கால அவகாசம் கேட்டும், சிலர் ஒரு பகுதி தொகை உடன் செலுத்துவதாக ஒப்புக்கொண்டதின் பேரில் மற்ற கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கைகள் தவிர்க்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை