உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கி சிதம்பரம் பக்தர்கள் 30 பேர் தவிப்பு

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கி சிதம்பரம் பக்தர்கள் 30 பேர் தவிப்பு

கடலுார்: கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில் ஆன்மிக சுற்றுலா சென்ற 30 பேர் உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களை பத்திரமாக மீட்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.சிதம்பரம் சுற்றுப்பகுதியில் இருந்து கடந்த 3ம் தேதி 30 பேர் வடஇந்தியாவுக்கு ஆன்மிக சுற்றுலா புறப்பட்டு சென்றனர். இந்த சுற்றுலா குழுவில் 17பெண்களும், 13 ஆண்களும் அடங்குவர். சிதம்பரத்ததில் இருந்து சென்னைக்கு ரயிலிலும், பின்னர் டில்லிக்கு விமானம் மூலம் சென்றுள்ளனர். அங்கிருந்து உத்தரகாண்ட்டிற்கு சென்று கோவில்களில் தரிசனம் செய்துள்ளனர். பின்னர்உத்தரகாண்ட்டில் உள்ள பித்தோராகர் பகுதிக்கு செல்லும்போது அப்பகுதியில்கனமழை, காற்று வீசியதால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதனால் சுற்றுலா சென்ற வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.சுற்றுலா சென்ற அனைவரும் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து தகவல் அறிந்த கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், உத்தரகாண்ட் மாநிலம், பித்தோராகர் கலெக்டரிடம் பேசி, அங்குகனமழையில் சிக்கியுள்ளவர்களை பாதுகாப்பாக அனுப்பி வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அதற்கு பித்தோராகர் கலெக்டர் அனைவரும் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும்,அவர்களுக்கு உணவு, குடிநீர் உட்பட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. நாளை வானிலையை பார்த்து ஹெலிகாப்டர் மூலம் அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததாக கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ