வடலுாரில் 500 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்
கடலுார்: வடலுார் நகராட்சியில் குடோனில் பதுக்கி வைத்திருந்த அரசால் தடைசெய்யப்பட்ட 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.வடலுார் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யப்படுவதாகவும், குடோன்களில் மறைத்து வைத்திருப்பதாகவும் புகார் வந்தது. இதையடுத்து, நகராட்சி கமிஷனர் ரஞ்சிதா தலைமையிலான அதிகாரிகள், கடலுார் சாலை, நெய்வேலி சாலையில் உள்ள குடோன்களில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அதில், 500 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். குடோன் உரிமையாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.