உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / டாஸ்மாக்கை அகற்ற கோரி முற்றுகை சிதம்பரத்தில் பா.ஜ.,வினர் 70 பேர் கைது

டாஸ்மாக்கை அகற்ற கோரி முற்றுகை சிதம்பரத்தில் பா.ஜ.,வினர் 70 பேர் கைது

சிதம்பரம் சிதம்பரத்தில், டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பாஜ.,வினர் 70 பேரை போலீசார் கைது செய்தனர்.சிதம்பரம் பஸ் நிலையத்தில் உள்ள 2 டாஸ்மாக் கடையை இட மாற்றம் செய்யக் கோரி பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்புகள் சார்பில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், நேற்று காலை பா.ஜ., சார்பில் பஸ் நிலையத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி மாவட்ட தலைவர் தமிழழகன் தலைமையில், நகர துணைத் தலைவர் கோபி, மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட தலைவர் விக்னேஸ்வரன், மகளிர் அணி மாவட்ட செயலாளர் அர்ச்சனா ஈஸ்வர் மற்றும் ஸ்ரீதர், சரவணகுமார், அகத்தியர் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது, பஸ் நிலையத்தின் நுழைவு வாயிலில், திடீரென, அமர்ந்து, முற்றுகை பேராாட்டத்தில் ஈடுபட்டனர்.சிதம்பரம் டி.எஸ்.பி, லாமேக் தலைமையில், இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், சப் இன்ஸ்பெக்டர் பரணிதரன் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ., வினர் 70 பேரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை