ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கடலுார்: கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில், தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கடலுார் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். சென்னை மண்டல மாநில செயலாளர் மகாதேவன், விழுப்புரம் மாவட்ட செயலாளர் பூபாலன் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன் கண்டன உரையாற்றினார்.இதில், வார விடுமுறை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்படும் 108 ஆம்புலன்ஸ்களை முறையாக இயக்கப்பட வேண்டும். ஊதிய உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.