மேலும் செய்திகள்
சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு கூட்டம்
30-Aug-2024
சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகம் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு திட்ட ஒருங்கிணைப்பாளர் குமார் தலைமை தாங்கினார். திட்ட அலுவலர் நீலகண்டன் வரவேற்றார். செஞ்சிலுவை சங்க இயக்குனர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். கல்வி புலமுதல்வர் குலசேகரபெருமாள் பிள்ளை, கலைப்புல முதல்வர் விஜயராணி சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். நுாலகர் சிவராமன், துணை நுாலகர் பாலகிருஷ்ணன் பாராட்டுரை வழங்கினர். சிதம்பரம் வட்டார போக்குவரத்துத்துறை மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா, சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். திட்ட அலுவலர் பிரபாகரன் நன்றி கூறினார்.இறுதியாண்டு மருத்துவ உளவியல் மற்றும் பயன்பாட்டு உளவியல் மாணவர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
30-Aug-2024