மேலும் செய்திகள்
கஞ்சா பதுக்கிய முதியவர் கைது
21-Feb-2025
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே கஞ்சா பதுக்கிய வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் கடந்த 4ம் தேதி ரோந்து சென்றபோது, பரவளூர் பஸ் நிறுத்தத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த ஆறு பேரை மடக்கிப் பிடித்தபோது ஒருவர் தப்பியோடினார். மீதமுள்ள ஐந்து பேரிடம் விசாரித்ததில், அவர்கள் 100 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.ஐந்து பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து மொபைல் போன்கள், 4 ஆயிரம் ரொக்கம், மோட்டார் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்நிலையில், தப்பியோடிய படுகளாநத்தம் ஜெய்சங்கர் மகன் கருப்பன் (எ) ஆனந்த், 29, என்பவரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.
21-Feb-2025