ஜெயப்பிரியா கல்வி குழுமத்திற்கு பாராட்டு
மந்தாரக்குப்பம் : பள்ளி கல்வித் துறை சார்பில் பெற்றோர்களை கொண்டாடுவோம் மண்டல மாநாட்டிற்கு திருப்பயரில் இடம் வழங்கிய ஜெயப்பிரியா கல்வி குழுமத்திற்கு முதல்வர் பாராட்டி நினைவு பரிசு வழங்கினார்.பள்ளி கல்வித்துறை சார்பில் பெற்றோர்களை கொண்டாடுவோம் மண்டல மாநாடு நேற்று திருப்பயரில் ஜெயப்பிரியா வித்யாலாயா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பெற்றோர் ஆசிரியர் கழக செயலி வெளியிடுதல், சிறப்பு மலர் வெளியிடுதல், அரசுப்பள்ளிகளுக்கு நன்கொடை வழங்கிய கொடையாளர்களை கவுரவித்தல், அரசு பள்ளி கட்ட டங்களை காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்து உரையாற்றினார். அதை தொடர்ந்து மண்டல மாநாட்டிற்கு இடம் வழங்கிய ஜெயப்பிரியா வித்யாலாயா கல்வி குழும தலைவர் ஜெய்சங்கரை பாராட்டி, முதல்வர் ஸ்டாலின் நினைவு பரிசு வழங்கினார். ஜெயப்பிரியா பள்ளி கல்விக் குழும பொருளாளர் அனிதா ஜெய்சங்கர், ஜெய்நித்திஷ், ஜெய்நிஷிதா, அமைச்சர்கள் பன்னீர்செல்வம், கணேசன், மகேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.