பி.எட்., மாணவி மாயம் போலீஸ் விசாரணை
விருத்தாசலம்: ஸ்ரீமுஷ்ணம் அடுத்த காவனுாரை சேர்ந்தவர் செல்வமணி மகள் சர்மிளா,21; தனியார் கல்லுாரியில் பி.எட்., இறுதியாண்டு படித்து வருகிறார். கடந்த 6ம் தேதி இறுதி தேர்வெழுத, விருத்தாசலத்தில் உள்ள தனது அக்கா வீட்டில் இருந்து புறப்பட்டு சென்வர், கல்லுாரிக்கும் செல்லவில்லை. வீட்டிற்கும் திரும்பி வரவில்லை.இது குறித்து செல்வமணி புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.