உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த பா.ஜ., தயக்கம் மகிளா காங்., மாநில தலைவி பேட்டி

33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த பா.ஜ., தயக்கம் மகிளா காங்., மாநில தலைவி பேட்டி

விருத்தாசலம்: 'பா.ஜ., அரசு, பெண்களை வன்மையாக வஞ்சிப்பதாக மகிளா காங்., மாநில தலைவர் சையது அசீனா குற்றம் சாட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் விருத்தாசலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:மத்திய பா.ஜ., அரசு, இந்நாட்டு பெண்களை துச்சமாக மதிக்கிறது.33 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்றிவிட்டு, அதனை அமல்படுத்த மறுக்கிறது. பா.ஜ., ஆட்சியில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பெண்களை வன்மையாக வஞ்சிக்கிறது.தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக இருந்த குஷ்பு, மணிப்பூர் பற்றி எரிந்த சம்பவத்திற்கு வாய் திறக்கவில்லை. மேற்கு வங்க சம்பவத்திற்கு மம்தா பானர்ஜி பதவி விலகுவாரா என கேள்வி கேட்கிறார்.ஆதித்யநாத், அமித்ஷா, மோடி ஆகியோரை கேள்வி கேட்காத ஒரு தேசிய தலைவர் வானதி சீனிவாசன். 33 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு நாங்கள் போராடி வருகிறோம். பா.ஜ.,வில் தலைவர்களும் சர்வாதிகாரியாகவே உள்ளனர். சில நாட்களுக்கு முன் இட ஒதுக்கீடு குறித்து ஜனாதிபதியை சந்தித்து மனு கொடுத்தோம். அவர் ஒரு பெண் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றார்.பேட்டியின்போது ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ