உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நுாலக வாசகர் வட்டம் உலக மகளிர் தின விழா

நுாலக வாசகர் வட்டம் உலக மகளிர் தின விழா

கடலுார்: கடலுார் அரசு தலைமை மருத்துவமனை கிளை நுாலக வாசகர் வட்டம் சார்பில், உலக மகளிர் தின விழா நடந்தது.வட்ட தலைவர் சிங்காரம் தலைமை தாங்கினார். கண் டாக்டர் கேசவன் முன்னிலை வகித்தார். செயலாளர் பார்த்திபன் வரவேற்றார். நலப்பணிகள் இணை இயக்குனர் (பொறுப்பு) குமார், மகளிர் தின விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். ஓய்வு பெற்ற இணை இயக்குனர் சாரா செலின்பால், ஆசிரியை கலைச்செல்வி, கண்காணிப்பாளர் வத்சலா விருது பெற்றனர். ஓய்வுபெற்ற கலால் இணை ஆணையர் சண்முகசுந்தரம், ஓய்வுபெற்ற உணவு பாதுகாப்பு அலுவலர் நல்லதம்பி வாழ்த்துரை வழங்கினர். கவிஞர் கவிமனோ தலைமையில் கவியரங்கம் நடந்தது.துணைத்தலைவர் குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை