ரூ.4.70 கோடியில் பஸ் நிலையம் புதுப்பிக்கும் பணி துவக்கம்
பண்ருட்டி; பண்ருட்டி நகராட்சி பஸ் நிலையம் 4.70 கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கும் பணியை நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் துவக்கி வைத்தார்.பண்ருட்டி நகராட்சி பஸ் நிலையத்தில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் 2024-2025ன் கீழ் பஸ்நிலையம் புதுப்பிக்கும் பணி 4 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பில் பூமி பூஜை துவக்க விழா நடந்தது. நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இதில் மாவட்ட துணை செயலாளர் தணிகைசெல்வம், துணை சேர்மன் சிவா, பொறியாளர் கண்ணன், உதவி பொறியாளர் கார்த்திகேயன், அவை தலைவர் ராஜா, பொருளாளர் ராமலிங்கம், கவுன்சிலர்கள் ஷமீம்பேகம், வெங்கடேசன், சலீம்ஜரின்னிஷா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.