மேலும் செய்திகள்
அரசு பள்ளி ஆண்டு விழா
01-Mar-2025
சிதம்பரம்: சிதம்பரம், பரமேஸ்வரநல்லூரில் அமைந்துள்ள சரசு மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா நடந்தது.பள்ளி தாளாளர் கவிதாமுருகன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் சின்னதுரை ஆண்டறிக்கை வாசித்தார். சரசு அறக்கட்டளை நிர்வாகி சுவேதா வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பொன்னம்பலம், பட்டிமன்ற பேச்சாளர்கள் அன்பழகன், கயல்விழி சிவகுமார் ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினர். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பள்ளி ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.ஆசிரியர் கஸ்துாரி நன்றி கூறினார்.
01-Mar-2025