உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அண்ணாகிராமத்தில் திட்டப் பணிகள் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு

அண்ணாகிராமத்தில் திட்டப் பணிகள் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு

கடலுார்: கடலுார் மாவட்டம், அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு மேற்கொண்டார்.அண்ணாகிராமம ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அகரம் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுமான பணி நடந்து வருவதையும், சன்னியாசிப்பேட்டை ஊராட்சியில் குப்பை தரம் பிரித்தல் கூடம், அமைக்கும் பணி மற்றும் 42.65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஊராட்சி செயலகம் கட்டுமான பணிகள் நடைபெறுவதையும், மேலும் அவ்வூராட்சியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்திள் செயல்பாடுகள் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தொடர்ந்து சன்னியாசிப்பேட்டை ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பெருமளவில் மரக்கன்றுகள் நடும் பணிகள் மற்றும் 9.41 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அய்யனார் கோயில் குளம் துார்வாரும் பணிகள் நடைபெறுவதையும், சன்னியாசிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு குழந்தை நேய பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 31.42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர் பள்ளவராயநத்தம் ஊராட்சியில் குப்பை தரம் பிரித்தல் கூடத்தின் செயல்பாடுகள் குறித்தும் மற்றும் அதனருகே15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை, மக்காகுப்பை உரக்குழிகள் அமைக்கப்பட்டு வருவதையும், பிரதான் மந்திரி ஜன்மன் திட்டத்தின்கீழ் வீடு கட்டுமானப் பணிகள் நடந்து வருவதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் அனைத்து திட்டப்பணிகளையும் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை