உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி...

பள்ளி அருகே ஆக்கிரமிப்பு விருத்தாசலம் தென்கோட்டை வீதி நகராட்சி நடுநிலைப் பள்ளி முகப்பில் நிறுத்தியுள்ள தள்ளுவண்டிகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். – குமரவேல், விருத்தாசலம். – பஸ் இயக்கப்படுமா? பெண்ணாடத்தில் இருந்து பெண்ணாடம் ரயில் நிலையத்திற்கு அரசு டவுன் பஸ் இயக்க போக்குவரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். – தனசேகரன், பெ.பொன்னேரி. – குளம் துார்வாரப்படுமா? பெண்ணாடம் மேற்கு மெயின்ரோடு பகுதியில் பராமரிப்பின்றி துார்ந்துள்ள புத்தர் குளத்தை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். – சுரேஷ், பெண்ணாடம். – திறக்காத சுகாதார நிலையம் பெண்ணாடம் அடுத்த ஓ.கீரனுாரில் பாழாகி வரும் துணை சுகாதார நிலையத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். – ரவி, ஓ.கீரனுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !