உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

நிழற்குடை ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா? திட்டக்குடி அடுத்த ஆவினங்குடியில் ஆக்கிரமிப்பில் உள்ள பயணியர் நிழற்குடை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். – ஏழுமலை, நெய்வாசல். பொதுமக்கள் பாதிப்பு விருத்தாசலம், தென்கோட்டைவீதியில் தள்ளுவண்டிகள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் பயணிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். – வேல்முருகன், விருத்தாசலம். நிழற்குடை தேவை பெண்ணாடம் அடுத்த துறையூர் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். – ரமேஷ், துறையூர். சோலார் விளக்குகள் அமைக்கப்படுமா? பெண்ணாடம் அடுத்த சவுந்திரசோழபுரம் – கோட்டைக்காடு மேம்பாலத்தில் சோலார் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். – கருணாநிதி, புக்குழி. பயணிகள் அவதி பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரி பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். – தனசேகரன், பெ.பொன்னேரி. விபத்து அபாயம் விருத்தாசலம் – கடலுார் சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முகப்பில் வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். – மோகன், விருத்தாசலம். ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா? திட்டக்குடி பஸ் நிலைய நிழற்குடையில், பயணிகளுக்கு இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள தள்ளுவண்டி கடைகளை அகற்ற போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். – ரவி, குடிக்காடு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி