சர்வ சேவா சங்க கட்டடம் இடிப்புக்கு கண்டனம்
சிதம்பரம்: உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியி சர்வ சேவா சங்கக் கட்டடம் இடிக்கப்பட்டதற்கு, சிதம்பரம் காந்தி மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.சிதம்பரம், வாகீசர் நகரில் உள்ள காந்தி மன்றத்தில் செயற்குழுக் கூட்டம் நடந்தது. மன்ற தலைவர் ஞானம் தலைமை தாங்கினார். வாரணாசியில் 1948ம் ஆண்டு ரயில்வே துறையிடம் இருந்து கிரையம் வாங்கிய இடத்தில் இயங்கி வந்த பழமை வாய்ந்த சர்வ சேவா சங்கக் கட்டடம், கடந்த ஆண்டு, ஆகஸ்டில் இடித்து, அங்கிருந்த, காந்திய புத்தகங்கள், அரிய பொக்கிஷங்கள் வெளியே வீசப்பட்டது.அந்த இடம் ரயில்வே துறைக்கு வேண்டுமெனில் உரிய இழப்பீடு, மாற்று இடம் வழங்காமல் கட்டடம் இடிக்கப்பட்டதற்கு கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மாற்று இடம் வழங்காத உத்தரப் பிரதேச அரசை கண்டித்து, அகில இந்திய காந்திய தலைவர்கள், வாரணாசியில் கடந்த 11ம் தேதி 100 நாள் சத்தியாகிரகப் போராட்டத்தை துவங்கியுள்ளனர். அதற்கு, சிதம்பரம் காந்தி மன்றம ஆதரவு தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் மன்ற உறுப்பினர்கள் லட்சுமணன், வனஜா தில்லைநாயகம், தமிழரசி சேகர், ச. சீனுவாசன் உள்ளிட்டோர் பேசினர். மன்ற துணை செயலாளர் முத்துக்குமரன் நன்றி கூறினார்.