உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் அரசு மருத்துவமனையில் திட்ட இயக்குனர் திடீர் ஆய்வு

கடலுார் அரசு மருத்துவமனையில் திட்ட இயக்குனர் திடீர் ஆய்வு

கடலுார்: கடலுார் அரசு மருத்துவமனையில், தமிழ்நாடு சுகாதார முறை திட்ட இயக்குனர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார்.கடலுார் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், தமிழ்நாடு சுகாதார முறை திட்ட இயக்குனர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார்.அப்போது, மருத்துவமனையில், முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து, சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். பின் அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட மருத்துவமனை முழுவதும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து, மருத்துவமனையில் கட்டப்பட்ட கழிவுநீர் வடிகாலை திறந்து வைத்தார்.தொடர்ந்து மருத்துவ அதிகாரிகளுடன், திட்ட இயக்குனர் அருண் தம்புராஜ் ஆய்வு கூட்டம் நடத்தினார்.அப்போது, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ஹிரியன் ரவிக்குமார், மருத்துவமனை கண்காணிப்பாளர் அசோக் பாஸ்கர், டாக்டர் காரல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை