கடலுார் சில்வர் பீச், அண்ணா மார்க்கெட் கட்டுமான பணிகள்; கலெக்டர் ஆய்வு
கடலுார்; கடலுாரில் ரூ.10 கோடி மதிப்பில் நடக்கும் வெள்ளி கடற்கரை, அண்ணா மார்க்கெட் பணிகளை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.கடலுார் வெள்ளிக்கடற்கரை ரூ. 4.98 கோடி ரூபாய் மதிப்பில் அதிநவீன பொழுதுபோக்கு மின் சாதனங்கள் அமைத்தல், அழகிய வேலைப்பாடுடன் கூடிய பூங்கா, செயற்கை நீருற்றுகள், ஓய்வெடுக்கும் பகுதி, சாலை தடுப்பு, அழகிய நடைபாதை, சிற்றுண்டி கடைகள், குப்பைத்தொட்டிகள் மற்றும் வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதனை மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு கூறியதாவது; மக்கள்தொகை பெருக்கம், எதிர்கால தேவை கருதி ரூ. 5.03 கோடி ரூபாய் மதிப்பில் அண்ணா மார்க்கெட்டில் ஏற்கனவே உள்ள 126 பழையக்கடைகள் அப்புறப்படுத்திவிட்டு, புதிதாக 122 கடைகள் அமைக்கும் பணி நடந்துவருகிறது. 58 கடைகள் கான்கிரீட் மேற்கூரையும், 64 கடைகள் தகர மேற்கூரையுடன் அமைக்கப்படுகிறது.பணிகள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவுறுத்தப்பட்டு உள்ளது என கூறினார். மாநகராட்சி கமிஷனர் அனு உடனிருந்தார்.