மின்வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்
விருத்தாசலம்: விருத்தாசலம் மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில், தொடர் மின்வெட்டை கண்டித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. விருத்தாசலம் அடுத்த ராஜேந்திரபட்டிணம் கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் கடந்த ஒருமாதமாக தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால், கிராம மக்கள், விவசாயிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதில், ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று விருத்தாசலம் மின் செயற்பொறியாளர் அலுவலகம் முன் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது,