மேலும் செய்திகள்
பிரகதீஸ்வரர் கோவிலில் தர்மபுரம் ஆதீனம் தரிசனம்
08-Feb-2025
புவனகிரி : புவனகிரி அடுத்த ஆதிவராகநத்தம் வெற்றி வேலாயுத சுவாமி கோவிலில் தருமபுரம் ஆதீனம் தரிசனம் செய்தார்.கடலுார் மாவட்டம், புவனகிரி அடுத்த ஆதிவராகநத்தம் வெற்றி வேலாயுத சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா இன்று 10ம் தேதி நடக்கிறது. அதனையொட்டி, கடந்த 8ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வரபூஜையுடன் துவங்கியது.நேற்று இரண்டாம் கால யாக சாலை பூஜையில் தருமபுரம் ஆதீனம் மசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் பங்கேற்று தரிசனம் செய்தார். தொடர்ந்து, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.இன்று காலை 9:00 மணியில் இருந்து 10:30 மணிக்குள் திருக்கோவில் மற்றும் பரிவார தெய்வங்களின் விமானத்தில் புனித நீரூற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகள் தர்மகர்த்தா மதியழகன் தலைமையில் நடைபெற்று வருகிறது.
08-Feb-2025