மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
கடலுார்: கடலுாரில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் நடேசன் தலைமை தாங்கினார். வசந்தி, கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் ஆளவந்தார் கண்டன உரையாற்றினார். ரவி, ஜெயலட்சுமி, சிவகாமி, பாவாடைசாமி, பார்த்தீபன், ஜெயபால், சுந்தரவேல், சண்முகம் பங்கேற்றனர். வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 35 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு ஒரு நபருக்கு 7 கிலோ அரிசி வழங்கப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என, ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.