உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்

தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம் : மின் கட்டண உயர்வு கண்டித்து, விருத்தாசலத்தில் தே.மு.தி.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து தலைமை தாங்கினார். அவைத் தலைவர் ராஜாராம், மாவட்ட பொருளாளர் ராஜ், துணைச் செயலாளர்கள் பாலமுருகன், சித்தநாதன், சிவரஞ்சனி ஜெயசங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர் சிவமுருகன் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் ராஜ்குமார், மாவட்ட துணை செயலாளர் வேல்முருகன் வரவேற்றனர்.ஒன்றிய செயலாளர்கள் செம்பை, தனசேகர், ஜெயக்குமார், சேகர், முத்து, தென்னரசு, முன்னாள் நகர செயலாளர் ரமேஷ், நகர நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசின் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.ரேஷன் பொருட்கள் தடையின்றி வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைககள் குறித்து பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ