துாக்கணாம்பாக்கம் அரசு பள்ளி மாணவர்கள் கபடி போட்டியில் சாதனை
நெல்லிக்குப்பம்: துாக்கணாம்பாக்கம் அரசு பள்ளி மாணவர்கள் கபடி போட்டியில் சாதனை படைத்து வருகின்றனர்.நெல்லிக்குப்பம் அடுத்த தூக்கணாம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ரவி மாணவர்களின் கல்வியில் மட்டும் கவனம் செலுத்தாமல் விளையாட்டிலும் சிறந்து விளங்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.இதற்காக உதவி தலைமையாசிரியர் வெஸ்லி,உடற்கல்வி இயக்குனர் ராஜேந்திரன்,உடற்கல்வி ஆசிரியை ஸ்னோஸ்டெபிலா ஆகியோர் மாணவர்களுக்கு கபடி உட்பட பல விளையாட்டுகளுக்கு பயிற்சி தருகின்றனர்.அதனடிப்படையில் அண்ணாகிராமம் குறுவட்ட அளவில் நடந்த போட்டிகளில் 14,17,19 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட கபடி போட்டிகளில் மூன்று பிரிவிலும் இப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.இவர்கள் மாவட்ட அளவில் நடக்கும் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.மாநில அளவில் போட்டியில் வெற்றி பெறுவதே தங்கள் லட்சியம் என மாணவர்கள் கூறினர்.வெற்றி பெற்ற மாணவர்களை தலைமையாசிரியர் ரவி உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டி பரிசு வழங்கினர்.