உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாற்றுத்திறனாளிகளுக்கு 6ல் வேலை வாய்ப்பு முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கு 6ல் வேலை வாய்ப்பு முகாம்

கடலுார் : மாற்றுத்திறனாளிகளுக்கான மண்டல அளவிலான வேலை வாய்ப்பு முகாம் திருச்சியில் வரும் 6ம் தேதி நடக்கிறது.அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மகளிர் மேம்பாட்டு திட்ட அலுவலகம் இணைந்து, திருச்சி பஸ் நிலையம் அருகே கன்டோன்மெண்ட் மெக்டோனால்டு ரோடு கலையரங்க மண்டபத்தில் வரும் 6ம் தேதி, வேலை வாய்ப்பு முகாமை நடத்துகிறது.முகாம் காலை 9:00 மணிக்கு துவங்கி 4:00 வரை நடக்கிறது. அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்குவதுடன், தொழிற்பயிற்சிகளுக்கான பயனாளிகள் தேர்வு செய்யப்படுகிறது.திருச்சி, தஞ்சாவூர், அரியலுார், பெரம்பலுார், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுத்துறை மற்றும் கடலுார் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கலாம்.முகாமில் பங்கேற்க ஆர்வம் உள்ள மாற்றுத்திறனாளிகள் https://forms.gle/kcwsT2/kngt3q7QLy7 என்ற வலைதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். அல்லது மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை, தனித்துவ அடையாள அட்டை, ஆதார் அட்டை, கல்விச்சான்று ஆகியவை நகலுடன் பாஸ்போட் சைஸ் போட்டோ, பணி அனுபவ சான்று, மற்றும் பயோடேடா ஆகியவையுடன் முகாம் நடக்கும் இடத்தில் நேரில் பதிவு செய்து வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம்.மேலும் விபரங்களுக்கு திருச்சி மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை, 0431 2412590, திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை 0431 2413510 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இத்தகவலை கடலுார் கலெக்டர் சிபி ஆதித்தியா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ