உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முதல்வர் கோப்பை போட்டிக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

முதல்வர் கோப்பை போட்டிக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

திட்டக்குடி: முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப்போட்டியில் பங்கேற்க பதிவு செய்வதற்கான கால அவகாசம் செப்.2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கடலுார் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார் விடுத்துள்ள செய்தி குறிப்பு:தமிழகத்தில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடக்க உள்ளது. போட்டிகளில் கலந்து கொள்ள https://sdat.tn.gov.inஎன்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து, ஆவணங்களை சமர்பித்து பதிவேற்றம் செய்ய வேண்டும். இப்போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு செய்ய ஆக., 25ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், விளையாட்டு வீரர்களின் நலன் கருதி, விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு செப்., 2ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, இதுவரை பதிவு செய்யாத விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் உடனடியாக பதிவு செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ