பரங்கிப்பேட்டையில் படத்திறப்பு விழா
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில், மறைந்த அ.தி.மு.க., நகர செயலாளர் மாரிமுத்து படத்திறப்பு விழா நடந்தது.நகர இளைஞரணி செயலாளர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் முருகுமாறன், முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் முன்னிலை வகித்தனர். மறைந்த அ.தி.மு.க., நகர செயலாளர் மாரிமுத்து படத்தை, பாண்டியன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவர் குமார், மாவட்ட பொருளாளர் தோப்பு சுந்தர், மாவட்ட இணை செயலாளர் ரெங்கம்மாள், ஒன்றிய செயலாளர்கள் ரெங்கசாமி, அசோகன், சுந்தரமூர்த்தி, மாவட்ட மீனவரணி செயலாளர் வீராசாமி, கவுன்சிலர் ஜெயந்தி ஜெய்சங்கர், கிள்ளை நகர செயலாளர் தமிழரசன், நகர துணை செயலாளர் இக்பால், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தஜோதி சுதாகர், வார்டு செயலாளர் கலைவாணன், முன்னாள் நகர அவைத் தலைவர் மாரியப்பன், பா.ம.க., முன்னாள் மாவட்ட செயலாளர் முருகன் மற்றும் அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.