அரசு தொழில்நுட்ப தேர்வு சி.சி.சி. பயிலகம் சாதனை
கடலுார்: கடலுார் சி.சி.சி.கம்ப்யூட்டர் கல்வி பயிலக மாணவ, மாணவிகள் 174 பேர் அரசுத் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். அரசு நடத்திய தொழில்நுட்ப கம்ப்யூட்டர் தேர்வில் சி.ஓ.ஏ., பிரிவு மற்றும் தட்டச்சு தேர்வில் கடலுார் மஞ்சக்குப்பம் சி.சி.சி.கம்ப்யூட்டர் கல்வி, தட்டச்சு பயிலகத்தில் பயிலும் 174 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று தொடர் சாதனை படைத்துள்ளனர்.இவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி பயிலகத்தில் நடந்தது. பயிலக முதல்வர் பத்மகுமார் தலைமை தாங்கினார். ஏ.டி.எஸ்.பி., பிரபாகரன், தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார்.இப்பயிலகத்தில் படித்து ஊரக வளர்ச்சித் துறை உதவியாளராக பணிபுரியும் சரண்யா, நீதித்துறை உதவியாளர் சுபிதா ஆகியோர் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டினர்.