உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அருணாச்சலா பள்ளியில் பச்சை வண்ண விழா  

அருணாச்சலா பள்ளியில் பச்சை வண்ண விழா  

புவனகிரி : புவனகிரி அருணாச்சலா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் பச்சை வண்ண விழா நடந்தது.புவனகிரி அருணாச்சலா கல்வி அறக்கட்டளை உறுப்பினர் வனிதா ரத்தினசுப்ரமணியன் தலைமை தாங்கினார். நிர்வாகி ரத்தின சுப்பிரமணியன், கல்வி ஆலோசகர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். பள்ளி இயக்குனர் முத்துக்குமரன் வரவேற்றார்.நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர் பச்சை வண்ண ஆடை உடுத்தி பசுமை சூழலை உருவாக்கினர். பள்ளி வளாகம் முழுதும் பச்சை வண்ண பலுான் மற்றும் ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஒருங்கிணைப்பாளர் ரம்யா மாணவர்களின் நடனம், பாடல் மாறுவேட அணிவகுப்பு மற்றும் மவுன நாடகம் நடத்தினர். தலைமை ஆசிரியை கவிதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி