உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

கடலுார் : கடலுார் மாவட்ட போக்குவரத்து காவல்துறை சார்பில், சர்வதேச மகளிர் தின விழாவையொட்டி ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடந்தது.கடலுார் டவுன்ஹால் அருகில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. தொடர்ந்து பெண்கள் பங்கேற்ற ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடந்தது.நிகழ்ச்சிக்கு போக்குவரதது இன்ஸ்பெக்டர் அமர்நாத் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மேயர் சுந்தரி ராஜா, மாநகராட்சி ஆணையர் அனு கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தனர். மாநகர முக்கிய சாலைகள் வழியாக பேரணி சென்றது. போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர்கள் மகாலிங்கம், ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி