மேலும் செய்திகள்
வரும்30ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
27-Aug-2024
கடலுார் : கடலுாரில், விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாய மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் வரும் 30ம் தேதி நடக்கிறது.கடலுார் கலெக்டர் அலுவலக குறைதீர்வு கூட்டரங்கில், 30ம் தேதி காலை 10:00 மணிக்கு நடக்கிறது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்குகிறார். அனைத்து துறை அதிகாரிகள், அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.கூட்டத்தில், விவசாயிகள் வேளாண் சார்ந்த குறைகள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைகளை தெரிவிக்கலாம். கோரிக்கைகளை தெரிவிக்க விருப்பம் உள்ள விவசாயிகள் தங்கள் சிட்டா, அடங்கல் மற்றும் கிசான் அட்டையுடன் வருகை தந்து காலை 10:00 மணிக்குள் தங்கள் பெயர், கோரிக்கை விபரம், துறை பெயர் ஆகியவற்றை பதிவு செய்துக்கொள்ள வேண்டும்.விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கலெக்டரிடம் நேரிடையாக வழங்கலாம். விவசாயிகள் கோரிக்கைகளுக்கு சம்மந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள், உரிய பதில் அளிக்கவும், அதன் மீது தொடர் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படும் என, கலெக்டர் தெரிவித்துள்ளார்.
27-Aug-2024