உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கிராம செயலக கட்டடம் எம்.எல்.ஏ., திறந்து வைப்பு

கிராம செயலக கட்டடம் எம்.எல்.ஏ., திறந்து வைப்பு

கடலுார்: கடலுார் அடுத்த வரக்கால்பட்டு ஊராட்சியில் ரூ.42 லட்சம் மதிப்பில் கிராம செயலக கட்டட திறப்பு விழா நடந்தது.விழாவிற்கு பி.டி.ஓ.,க்கள் வீரமணி, பார்த்திபன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் மனோகரன் வரவேற்றார். அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, கிராம செயலக கட்டடத்தை திறந்து வைத்தார்.இதில், வி.ஏ.ஓ., அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகம், கூட்ட அரங்கம், ஊராட்சி செயலர் அலுவலகம் ஆகியவை திறக்கப்பட்டது.விழாவில் ஊராட்சி துணை தலைவர் முருகன், ஒன்றிய கவுன்சிலர் உமா பாஸ்கரன், ஊராட்சி தலைவர்கள் முத்துக்குமாரசாமி, தமிழரசி பிரகாஷ், கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், ஊராட்சி செயலர் கேசவன், தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ