மேலும் செய்திகள்
சிதம்பரம் கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
07-Feb-2025
சிதம்பரம் : சிதம்பரம் உட்கோட்ட நகர காவல் துறை சார்பில் புகார் மனுக்கள் மீதான விசாரணை முகாம் நடந்தது. சிதம்பரம் உட்கோட்டத்திற்குட்பட்ட சிதம்பரம், அண்ணாமலை நகர், கிள்ளை, பரங்கிப்பேட்டை, புவனகிரி உள்ளிட்ட 8 காவல் நிலையங்களில் பொதுமக்களிடம் இருந்து, பெறப்பட்ட, சிறு பிரச்சனைகள் குறித்த புகார்களுக்கான, விசாரணை முகாம் சிதம்பரத்தில் நடந்தது. தனியார் மண்டபத்தில் நடந்த விசாரணை முகாமிற்கு ஏ.டி.எஸ்.பி., கோடீஸ்வரன் தலைமை தாங்கினார். சிதம்பரம் டி.எஸ்.பி., லாமேக் முன்னிலை வகித்தார். விசாரணை முகாம் மூலம் உட்கோட்ட காவல் நிலையங்களுக்குட்பட்ட காவல் நிலையங்களின், 55 புகார் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. முகாமில், இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு, அம்பேத்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
07-Feb-2025