உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வேலை வாய்ப்பு முகாம்

வேலை வாய்ப்பு முகாம்

கடலுார்: கடலுாரில் வரும் 20ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:கடலுார் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக மாதம் தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமை சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், வரும் 20ம் தேதி கடலுார் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. முகாமில் 15ற்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்கின்றனர். முகாமில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ , டிப்ளமோ , பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் பயன்பெறலாம். முகாமில் தேர்ந்தெடுக்கப்படும் பதிவுதாரர்களின் பதிவு எண் வேலைவாய்ப்பு அலுவலக பதிவிலிருந்து நீக்கம் செய்யப்படமாட்டாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி