உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஜோசியர் மர்ம சாவு; போலீஸ் விசாரணை

ஜோசியர் மர்ம சாவு; போலீஸ் விசாரணை

வானுார்: ஆரோவில் அருகே வாடகை வீட்டில் தங்கியிருந்த ஜோசியர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.பொள்ளாச்சியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 55; ஜோசியர். இவர், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் ஆரோவில் அடுத்த இடையஞ்சாவடி கிராமத்தில் குடிபெயர்ந்தார். கடந்த 4 ஆண்டுகளாக இரும்பை மஹா காளேஸ்வரர் கோவில் அருகே ஜோசியம் பார்த்து வந்தார்.அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் முதல் மாடியில் வாடகைக்கு தங்கியிருந்தார். நேற்று முன்தினம் அவர், வீட்டில் இறந்து கிடந்ததாக, வீட்டின் உரிமையாளர் துரைக்கண்ணு என்பவர், வி.ஏ.ஓ., முரளிதரனுக்கு தகவல் தெரிவித்தார்.அதனைத் தொடர்ந்து வி.ஏ.ஓ., கொடுத்த புகாரின் பேரில், ஆரோவில் போலீசார் உடலைக் கைப்பற்றி, ரவிச்சந்திரன் இறப்புக்கான காரணம் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை