உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கர்நாடக டிரைவர் லாரி மோதி பலி

கர்நாடக டிரைவர் லாரி மோதி பலி

நெல்லிக்குப்பம்: சாலையில் நடந்து சென்ற கர்நாடக மாநில டிரைவர், லாரி மோதி இறந்தார்.கர்நாடகா மாநிலம் சித்தரதுர்கா மாவட்டம், தப்பகொண்டன் ஹல்லியை சேர்ந்தவர் லிங்கப்பா மகன் அஞ்சிதயா,55; லாரி டிரைவரான இவர் நேற்று முன்தினம் இரவு நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி.பாரி சர்க்கரை ஆலைக்கு பொருட்களை ஏற்றி வந்தார். லாரியை ஆலையில் நிறுத்தவிட்டு இரவு சாப்பிட, சாலையோரம் நடந்து சென்றபோது, பின்னால் வந்த லாரி மோதியது. அதில், அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.விபத்து குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை