முருகன் கோவில்களில் கிருத்திகை வழிபாடு
விருத்தாசலம் : மங்கலம்பட்டை பாலதண்டாயுதபாணி கோவிலில் ஆவணி மாத கிருத்திகை வழிபாடு நடந்தது.அதனையொட்டி, நற்று காலை 9:00 மணியளவில் பால், தயிர், சந்தனம், இளநீர், தன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷகம் நடந்தது. தொடர்ந்து, காலை 10:30 மணிக்கு தீபாராதனை நடந்தது. காலை 11:00 மணிக்கு பாலதண்டாயுதபாணி சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். நெல்லிக்குப்பம்
நெல்லிக்குப்பம், கீழ்பட்டாம்பாக்கம் வீரபத்ர சுப்ரமணிய சுவாமி கோவிலில் 108 சங்காபிஷகம் நடந்தது. மூலவர் வள்ளி, தேவசேனா சமதராய் சுப்ரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.இதபோன்று, அருள்தரும் அய்யப்பன் கோவில், பூலோகநாதர், வரசித்தி விநாயகர் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.