உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நாடக மேடை அமைக்க அடிக்கல் நாட்டல்

நாடக மேடை அமைக்க அடிக்கல் நாட்டல்

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்துள்ள பெரியகுமட்டி ஊராட்சியில் சிதம்பரம் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 7 லட்சம் மதிப்பில் நாடக மேடை அமைக்க பூமி பூஜை போடப்பட்டது.பரங்கிப்பேட்டை ஒன்றிய அ.தி.மு.க., அவைத் தலைவர் ரெங்கசாமி தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் ரெங்கம்மாள், மாவட்ட துணை செயலாளர் செல்வம் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் மரகதம் வரவேற்றார். பாண்டியன் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து, பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் ஆனந்தஜோதி சுதாகர், ரவி, பாஸ்கர், கிளை செயலாளர் பாஸ்கர், குணசீலன், ஞானவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !