உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மணல்மேடு பகுதியில் கால்நடை வார சந்தை; கவுன்சிலர் சுரேந்தர் கோரிக்கை

மணல்மேடு பகுதியில் கால்நடை வார சந்தை; கவுன்சிலர் சுரேந்தர் கோரிக்கை

திட்டக்குடி : 'திட்டக்குடி, மணல்மேடு பகுதியில், வேளாண் விரிவாக்க மைய கட்டடம் இடிக்கப்பட்ட இடத்தில் கால்நடை வார சந்தை அமைக்க வேண்டும்' என கவுன்சிலர் சுரேந்தர் கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும் அவர் கூறியதாவது:திட்டக்குடி நகராட்சி மணல்மேடு பகுதியில் பழுதடைந்த நிலையில் இருந்த வேளாண் விரிவாக்க மைய கட்டடத்தை இடித்துவிட்டு, அந்த இடத்தில் மக்களுக்கு பயன்படும் வகையில் கால்நடை வார சந்தை அமைக்க வேண்டும் என கலெக்டருக்கு கோரிக்கை வைத்திருந்தேன். அதன் அடிப்படையில் கட்டடம் இடித்து அகற்றப்பட்டது.அந்த இடத்தில் கால்நடை வார சந்தை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதாரண கிராம ஊராட்சியாக இருந்து, தாலுகா தலைமையிடமாக உள்ள வேப்பூரில் கால்நடை வாரசந்தை மூலம் நல்ல வருவாய் கிடைக்கிறது.தீபாவளி, ரம்ஜான், பக்ரீத் போன்ற பண்டிகை காலங்களில் பல கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்கப்படுகிறது. இதனால் வேப்பூரில் ஜவுளிக்கடை, நகைக்கடை போன்ற வணிக நிறுவனங்கள் உருவாகி ஊரின் வளர்ச்சிக்கு வார சந்தையும் ஒரு காரணமாக உள்ளது.இடவசதி, குடிநீர் வசதி, முறையான போக்குவரத்து வசதி உள்ள மணல்மேடு பகுதியில் கால்நடை வார சந்தை அமைப்பதால் நகராட்சிக்கு நிறைந்த வருவாய் கிடைக்கும். அரியலுார், பெரம்பலுார், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளுக்கு கால்நடை வார சந்தை மூலம் வருவாயும், தங்கள் கால்நடைகளுக்கு சரியான விலை கிடைப்பதால், கால்நடை வளர்ப்பவர்களும் ஆதாயம் அடைவர். எனவே, மணல்மேடு பகுதியில் கால்நடை வார சந்தை அமைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கவுன்சிலர் சுரேந்தர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை