உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம், : விருத்தாசலம் பாலக்கரையில் மா.கம்யூ., கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.வட்ட செயலாளர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார். மூத்த வழக்கறிஞர் சந்திரசேகரன், சி.ஐ.டி.யூ., கூட்டுறவு ஊழியர் சங்க பொதுச் செயலாளர் ஜீவானந்தம், விருத்தாசலம் ஒன்றிய அமைப்பாளர் வழக்கறிஞர் குமரகுரு, கம்மாபுரம் ஒன்றிய அமைப்பாளர்கள் இளங்கோவன், சுந்தரவடிவேல் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு கருப்பையன் கலந்து கொண்டு பேசினார். இதில், வட்டக் குழு உறுப்பினர்கள் ஜெயமணி, அன்புச்செல்வி, பெரியசாமி, செல்வகுமார், கோவிந்தன், வீராசாமி, சின்னத்தம்பி, நெல்சன், சுமதி, செந்தில் பரமசிவம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில், சுயேச்சையான பாலஸ்தீன நாட்டை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மோடி அரசு இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வதை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி