மேலும் செய்திகள்
வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசிமக விழா கொடியேற்றம்
04-Mar-2025
திட்டக்குடி; திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் கோவிலில் மாசி மகத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திட்டக்குடி அடுத்த திருவட்டத்துறை திரிபுரசுந்தரி உடனுறை தீர்த்தபுரீஸ்வரர் கோவில், தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் முதல் தலமாகும். சப்த துறைகளில் இந்த தலம் வெள்ளாற்றங்கரையில் அமைந்தது சிறப்பு வாய்ந்தது. இக்கோவிலில் நேற்று காலை 9:00 மணிக்கு, மூலவர் தீர்த்தபுரீஸ்வரர், திரிபுரசுந்தரி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், திபாராதனை நடந்தது. காலை 10:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, காலை 11:00 மணிக்கு மாசி மகத்திருவிழா கொடியேற்றம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா வரும் 11ம்தேதி, தீர்த்தவாரி வரும் 12ம் தேதியும், அன்று மாலை 4:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
04-Mar-2025