உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாசிமக திருவிழா ஆலோசனை கூட்டம்

மாசிமக திருவிழா ஆலோசனை கூட்டம்

திட்டக்குடி : திட்டக்குடியில் மாசிமக திருவிழா நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.தாலுகா அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, தாசில்தார் அந்தோணிராஜ் தலைமை தாங்கினார். நகராட்சி கமிஷனர் முரளிதரன், தீயணைப்பு நிலைய அலுவலர் சண்முகம் முன்னிலை வகித்தனர். போலீசார், நகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், திட்டக்குடி வெள்ளாற்றில் மாசிமக திருவிழா நடத்துவதற்கு வெள்ளாற்றை சுத்தம் செய்வது. பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது. தீயணைப்பு வாகனங்களை தயார் நிலையில் வைத்திருப்பது மற்றும் போலீஸ் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை