மேலும் செய்திகள்
செய்தி சில வரிகளில்...
30-Aug-2024
கிள்ளை: கிள்ளை அடுத்த மடுவங்கரை ஊராட்சியில், புதுச்சத்திரம் வட்டார சுகாதார நிலையம் சார்பில், வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது.ஊராட்சி தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் அமுதா வரவேற்றார். சேர்மன் கருணாநிதி, ஒன்றிய கவுன்சிலர் மோகன்தாஸ், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் நல்லதம்பி முன்னிலை வகித்தனர். முகாமை, பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் கலையரசன், குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.முகாமில், டாக்டர்கள் மிதிலைராஜன், கனிமொழி தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சிவபிரகாசம், மாவட்ட பிரதிநிதி ரவிச்சந்திரன், ஒன்றிய விவசாய தொழிலாளரணி அமைப்பாளர் சிவலோகம், சுகாதார ஆய்வாளர்கள், சவுந்தராஜன், முருகன், அன்பரசு, சரண்ராஜ், ராஜன், செல்வதுரை உட்பட பலர் பங்கேற்றனர்.சுகாதார ஆய்வாளர் பிரேம்குமார் நன்றி கூறினார்.
30-Aug-2024